Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 AUG 1926
இறப்பு 28 DEC 2019
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
வயது 93
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம் 1926 - 2019 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறமுடியவில்லை எம்மால்..!
எங்கள் அன்புத் தெய்வமே
ஆருயிர் ஐயாவே!

அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்!
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!

ஐயா நீங்கள் சென்றுவிட்டீர்கள் ஆனால் உங்கள் முகம்
எங்கள் கண்முன் நீங்காமல் வந்து போகின்றது
நீங்களும், அம்மாவும் இல்லற வாழ்வுக்கு
ஓர் உதாரணமாகவாழ்ந்தீர்கள்
எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் அன்று இல்லாமல்
எப்படி வாழ்ந்தீர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக
வாழ்ந்துவிட்டு இன்று உங்கள் துணை இங்கு
துணை இன்றி தனிமரமாக தவிக்கவிட்டு
நீண்ட தூரம் சென்றதேனோ?

முத்தம் தந்திடும் தாத்தா அப்பப்பா
சொத்தாய் கிடைத்த உங்களை பறிகொடுத்துவிட்டோம்
இனி நாங்கள் என்று காண்போமோ?

இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள் வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வரவேண்டி தொழுகின்றோம்

அலை ஐயனார் திரிவடிகளில் அமைதி பெற்றிட
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices