Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 AUG 1926
இறப்பு 28 DEC 2019
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
வயது 93
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம் 1926 - 2019 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு மூன்று ஆகிவிட்டது ஐயா!
 நீங்கள் எங்களை நிரந்தரமாய்
 பிரிந்து சென்று உங்கள் நினைவுகள்
எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது!

உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும் மீண்டும்
 வேண்டும் என உங்களைத்
 தேடுகின்றோம் ஐயா! சிரித்த
முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
 செம்மையாய் வாழ்ந்த ஐயா!
 உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
 அழியாது நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
 எந்நாளும் உயிர் வாழும் ஐயா!

அன்புள்ள எங்கள் ஐயாவே
அன்பால் எம்மை காத்து நின்று
 அறிவூட்டி எமை வளர்த்தாய்!
 அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
 ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
 என்றும் உன் நினைவுகள்
 சுமந்து உன் வழியில்
 உன் பிள்ளைகள் நாம்
 என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
 உம்மை நினைவு கூறும்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices