

திதி:26-08-2025
யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை!
முடிந்து போன உன் வாழ்க்கைக்கு
முடிச்சு போடவும் முடியவில்லை
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது - அதுபோல
உங்கள் நினைவுகளை எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
நிலையில்லாத இவ்வுலகில் நிஜமாக வாழ்ந்த வாழ்வு
இன்று கானல் நீரானதேனோ...?
வவாழ்க்கை என்னும் பயணத்தை பாதி வழி கடந்து
செல்வதற்குள் காலக்கொடியவன் கண்வைத்து உன்னுயிரை
வேளை வருமுன் பறித்து வருடமோ ஐந்தாகிவிட்டது
அதன் வலியோ எமக்கு ஆயுள்வரை தொடர்கிறது .....
தனது ஆருயிர் விடுமுன்பு தன்நலம் கருதாது உயரிய சேவையாகிய உடல் உறுப்புகளை வழங்கி அவர்கள் மிக்க நலமுடன் வாழ்கின்றனர் என உணர்ந்து இப்பூவுலகு விட்டு புகழ் உடல் பெற்று பொன் உலகு ஏகினார்.
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் அண்ணமார், அண்ணிமார், தம்பி, பெறாமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்...
தொடர்புகளுக்கு
- Mobile : +14168244405