Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAY 1971
இறப்பு 22 AUG 2020
அமரர் பிரபாகரன் மார்க்கண்டு (பிரபா)
கீதா மளிகை உரிமையாளர்- பிரான்ஸ்
வயது 49
அமரர் பிரபாகரன் மார்க்கண்டு 1971 - 2020 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் மார்க்கண்டு அவர்கள் பிறர் வாழ தன் உள் உறுப்புகள் தானம் வழங்கி 22-08-2020 சனிக்கிழமை அன்று ஞானவைரவரின் பொற்பாத கமலங்களில் ஜீவமுக்தி பெற்றார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகள் மற்றும்காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை) கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், சுப்ரமணியம்(யாழ்ப்பாணம்- தாய் மாமன்) விஜயலட்சுமி(தாய் மாமி) ஆகியோரின் ஆசை மருமகனும், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் புஷ்பவதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி(புங்குடுதீவு 1ம் வட்டாரம், கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிருபாகரன்(சுவிஸ்), தசிகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கங்காதேவி(சுவிஸ்), அஞ்சலா(கனடா), கம்சன்(இலங்கை), தட்சன்(இலங்கை), ஜீவிதன்(இலங்கை), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோன்(சுவிஸ்), கிருசன்(சுவிஸ்), சஞ்ஜித்(கனடா), யோயினா(கனடா), சயினா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தபேஸ், நயனன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்