யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அலங்கார மலர்கள் இங்கே உன்னை அலங்கரித்த கைகள் இங்கே
உறவுகளை கலங்க விட்டு உன் உயிர் தான் போனதெங்கே..?
நீ சிரித்து சேர்ந்த கூட்டம் இங்கே, நீ சேவை செய்த கூட்டம் இங்கே
நீ சாதனைகள் செய்யும் முன் சொல்லாமல் போனதெங்கே..?
பிரபாகரன் உன் பெயரில் அல்லவா தமிழ் பிறக்கிறது
உன்னால் நான்கு மனிதர்களுக்கு உயிர் கிடைக்கிறது
நீ விண்ணகம் சென்றாலும் இம் மண்ணுலகை உன் கண்கள் பார்க்கின்றன
இதயம் இடம் மாறினாலும் உதயம் உன்னை வாழ்த்தி வணங்குகிறது
சுழலும் பூமியை ஒரு கணம் நிறுத்தி நாம் சொல்ல வேண்டும்
மனித நேயம் உள்ளவனை இம் மண்ணில் இருந்து
ஏன் பிரித்தாய் என்று
பாசத்துடன் பழகி திரிந்தவனை பாவி நீ ஏன்
பறித்தாய்
இன்று வாழ்ந்து முடித்த முன்னோர்கள் போல்
இல்லாமல்
வாழப் போகும் மனிதர்களுக்கு உன்னை நீ தானம்
செய்து
எங்களின் அறிவு கண்களை அல்லவா திறந்து விட்டாய்..!!
நாட்கள் போய் கிழமை வந்தது, கிழமை போய் மாதம் வந்தது,
மாதம் போய் வருடம் வந்தது எத்தனை வருடம்
போனாலும் என்றும்
உன் நினைவு எங்களை விட்டு போகாது பிரபா
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...