யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள் மறைந்தும்
இன்னும் முகத்தில் வாட்டம் மாறவில்லை
முடிந்து போன உன் வாழ்க்கைக்கு
முடிச்சு போடவும் முடியவில்லை
ஊனமற்று போனது உடன் பிறப்பின் உள்ளங்கள் இன்று...
பத்து கட்டை தூரத்தில் பக்க துணையாய்
நமக்கென தாமிருந்த காலம் மறக்க
முடியவில்லை பல நினைவுகளை
தொலை தூரம் தொடாத வானம்
அதில் கண்ணைப் பறிக்கும் நட்சத்திரம்
போல் உன் சிரிப்பு இன்றும் நம் கண்ணுக்குள்...
அன்று போகும் பாதையில் முள்ளிருந்தும் அது
நம்மை குத்தவில்லை இன்று
முள்ளில்லா பாதையில் கூட நம்மால்
பயணிக்க முடியவில்லை....
தனது ஆருயிர் விடுமுன்பு தன்நலம் கருதாது உயரிய சேவையாகிய உடல்
உறுப்புகளை வழங்கி அவர்கள் மிக்க நலமுடன் வாழ்கின்றனர் என
உணர்ந்து இப்பூவுலகு விட்டு புகழ் உடல் பெற்று பொன் உலகு ஏகினார்.
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அண்ணமார், அண்ணிமார், தம்பி, பெறாமக்கள்,
உற்றார், உறவினர், நண்பர்கள்...
தொடர்புகளுக்கு
- Contact Request Details