யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய் நிலையாய் என்றும்
எங்களோடு எங்களின் இறைவனாய்-
என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
ஆண்டுகள் போனாலும்
நிமிடங்கள் போல் உள்ளது..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு இதயத்திலும்
வைக்கவில்லை
உயிராய்
வைத்திருக்கின்றோம்..!!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம்
பலரும் தவிக்கின்றோம்.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
நேற்று நடந்தது போல எங்கள்
கண்களில் நீர் இன்னமும் காயவில்லை...
அண்ணா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
தனது ஆருயிர் விடுமுன்பு தன்நலம்
கருதாது உயரிய சேவையாகிய
உடல் உறுப்புகளை வழங்கி அவர்கள்
மிக்க நலமுடன் வாழ்கின்றனர் என உணர்ந்து
இப்பூவுலகு விட்டு புகழ் உடல் பெற்று
பொன் உலகு ஏகினார்.
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அண்ணமார், அண்ணிமார், தம்பி,
பெறாமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்...