2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு செபமாலைமுத்து அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயரம்!
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இன்றில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்!
காலத்தால் எம்மைப் பிரிந்து!
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
அன்பின் உறைவிடமாய்
ஆறுதலில் தந்தையாக
இன்சொல்லில் இனியவராக வாழ்ந்தவரே!
வையகத்தே எம்மைவிட்டுச் சென்று
வாழ்வில் வாடுகிறோம் உமைவிட்டுப் பிரிந்து!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்