12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பீதாம்பரம் செல்லம்மா
வயது 76
அமரர் பீதாம்பரம் செல்லம்மா
1936 -
2013
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 09-02-2025
ஆண்டுகள் 12 சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை
நெஞ்சம் அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா
என்று கல்லறை வாழ்வில் நெடுங்காலம்
சென்றாலும் எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
காலங்கள் மறைந்து போகலாம் கண்களில் நிறைந்திருக்கும் திரு உருவம் மனங்களில் உறைந்திருக்கும் அவர்கள் அன்பும் பாசமும் என்றும் மறைவதில்லை . இறைவன் நிழலில் அமைதியுடன் வாழ்ந்திட பிரார்த்தனைகள்