யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் தெய்வமாகிவிட்ட
எங்கள் அப்பத்தா அம்மம்மாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயிரண்டு மாதங்கள் தன் கருவறையில் சுமந்தவளே
பையலென்ற போதே பரிந்தெடுத்து
தன் கையிலேந்தி பாலூட்டி மகிழ்ந்தவளே
வான் மதியின் வடிவே
வண்ணமுத மொழியே
தேன் இனிக்க பேசும் எங்கள்
தெவிட்டாத திரவியமே-அம்மா
உங்கள் ஒரு நாள் பிரிவிற்கே தவித்து போய்
வாசலிலே வழியோரம் விழி வைத்து காத்திருப்போம்
இன்று ஆண்டு ஆறு ஓடி மறைந்ததம்மா
தேடிக் களைத்து விட்டோம்!
ஏற்றிய மெழுகுதிரி உருகி ஒளி வீசுவதுபோல்
எம் வாழ்வில் ஒளியை ஏற்றி
நீ அணைந்து போனது ஏனம்மா
கண்ணின் இமையோரம் கண்ணீர் கசிந்துருக
நின் திருவடிகள் தொழுது
நினைவலைகள் சுமந்து
நல் ஆசி வேண்டி நிற்கும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.