யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் செல்லம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்.
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து எட்டு
ஆண்டுகள் ஆனாலும் உங்களை
மறந்திடுமோ எங்கள் நெஞ்சம்!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு... ???
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!