யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோயிற்புதுக்குளம் M.S Lane ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-03-2022
ஆண்டொண்று கடந்து சென்றது கனவு போல
விண்ணுக்கு சென்று ஒளியாக கலந்தவரே
எண்ணியபோதும் ஆறவில்லை உன் சோகம்
தீரவில்லை அம்மா - உன்
எண்ணங்கள் எம் உயிர் மூச்சாய் ஆகியதே.
அஞ்சாமை எடுத்துரைத்தாய்
விழும்வரை சாதித்து இருந்தாய்
வீரமாய் உன்வாழ்வில் இருந்து சென்றாய்
அம்மா என்றதும்; உன் நினைவு வந்திடுமே!
ஆண்டுகள் பல தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
உனது கருவறை அம்மா.
இமைபோல் எமையிறுக்கி காத்து
இறக்கையில் காத்த அன்னையே
எமை மறந்து இறைபதம் அடைந்து விட்டீர்
குடும்பத்துக்கு சூரியனாக காற்றாக வானமாக இருந்த தாயே
குடும்பத்து எண்ண அலைகளுக்கு இதயத்துடிப்பாக
வாழ்ந்த அம்மாவே!
உனது விழுதுகள் உன் வழி நாடி
இறுதிவரை வாழும் அம்மா.
மனித வாழ்வில் செய்ய வேண்டிய தானம் நான்கும்
செவ்வனவே செய்து வாழ்ந்த தாயே
கோமாதக்களின் தாயே! உன் கோமாதாவும்
தன்னுயிர் தானம் உனக் ஈந்ததுவே.
உன் காவலனும் தன்னுயிர் ஈந்தானே.
புண்ணியவதியே நீ செல்லுமிடமெங்கும்
உனக்கு மலர் பாதை தான் அம்மா
புனிதமான உனதான்மா
இறைவனடி வாழ நாமெல்லோரும்
வாழ்த்தி வணங்குகின்றோம் அம்மா!.
அன்னாரின் முதலாவது ஆண்டுத் திவசக் கிரிகைகள் Kovilputhukulam, M.S. Lane, Vavuniya, SriLanka எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
I miss you... Mom, It breaks me The ache never leaves, it lives in every breath I take. But when I close my eyes and remember your love, your laughter, and all our moments together , I feel...