Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 FEB 1941
விண்ணில் 24 SEP 2020
அமரர் பரமநாதர் பத்மநாதன் (பப்பன்)
ஓய்வு பெற்ற உதவி விவசாய பணிப்பாளர்
வயது 79
அமரர் பரமநாதர் பத்மநாதன் 1941 - 2020 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 59 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமநாதர் பத்மநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீர் விழி தோய!
 நீங்கா நினைவுகள் மிளிர
 நின் பிரிவின் காலம்
 ஆண்டு மூன்று ஆனதே!

இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ
 நீ பயணமானாய்...!
 ஒவ்வொரு நொடிகளிலும்
 இதயத்தின் துடிப்பைப் போல் அருகிலே
 நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!.

ஆண்டுகள் எத்தனை ஓடினாலும்
 நாம் இப் பூவுலகில் வாழும் வரை
 உம் நினைவுகள் எம்மை வாட்டுமையா
 ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
 வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே
 வர வேண்டும் நீங்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்