யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவு, ஆகாரங்கள், தேனீர்வகைகளை இல்லத்திற்கு கொண்டு வந்து தந்த அன்புள்ளங்களுக்கும், இறுதிக்கிரியைகளில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், திருமுறை ஓதிய மற்றும் அனைத்துக்கிரியைகளையும் நடத்திய அந்தணப் பெரியோர்களுக்கும், இவரது திருவுடலை இங்கு அனுப்பிவைத்தவர்களுக்கும், அவரை விரைவாக கனடா கொண்டுவர ஒழுங்கு செய்து உதவிய அனைவருக்கும், Funeral Hall ஊழியர்கள் எல்லோருக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my friend.