யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், பெரியகுளம் வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rapperswil St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் ராஜ்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வுகள் 13-07-024 சனிக்கிழமை அன்று Katholisches Kirchgemeindehaus Jona, Friedhofstrasse 3, 8645 Jona SG, Switzerland எனும் முகவரியில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பமும் வருகை தந்து அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my machchan