
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், பெரியகுளம் வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rapperswil St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் றாஜ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அமரர் பரமலிங்கம் றாஜ்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் 02-06-2025 திங்கள்கிழமை அன்று KATHOLISCHE KIRCHE JONA, FRIEDHOFSTRASSE-03, 8645 JONA எனும் முகவரியில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பமும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my machchan