7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-11-2024
மகனே.....!!!
உன் சிரிப்பு சத்தத்தையும்,
உஷ்ண மூச்சுக்காற்றையும்
உன்னதமான அன்பையும், உணர்கிறோம் இன்றும்
ஆண்டுகள் ஏழு அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறவாது எங்கள் நெஞ்சம்
மலரின் உதிர்வும் மனிதனின் மறைவும்
உலகிற்கு புதிதல்ல - மகனே
உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருகிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Our prayer, Oh great compassionate God guides the soul into your everlasting bliss. aum saanthi