6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 21-11-2023
இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
ஆண்டு 6 கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்....
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our prayer, Oh great compassionate God guides the soul into your everlasting bliss. aum saanthi