5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-11-2022
எத்தனை கவிதை எழுதினாலும்
முடியவில்லை
எம் கனவில் கலந்த
உன் எல்லையற்ற நினைவுகள்
நிற்கின்றன நிழலாக......
உன்னை இழந்து
காலங்கள்
கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில் என்றும்
நிலைத்திருப்பாய்!..
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
உந்தன் அன்பு முகமும்
நேசப் புன்னகையும்
கடவுளுக்குப் பிடித்ததோ!
உன்னை அவசரமாக
அழைத்து விட்டார்
நொடிப் பொழுதில் எமை
வருந்த
விட்டுச் சென்று விட்டீர்!..
நாம் இந்த மண்ணில் வாழும்
வரை
நம் இதயத்தோட்டத்தில்
அபிஷேக் என்னும் ரோஜாப் பூ
ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்.....
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Our prayer, Oh great compassionate God guides the soul into your everlasting bliss. aum saanthi