Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1955
மறைவு 24 MAR 2022
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)
பழைய மாணவர்- மல்லாகம் இந்துக் கல்லூரி தெல்லிபழை யூனியன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, உதைபந்தாட்ட வீரர்(Soccer Player), முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர், Greek Ship இல் Bosun ஆக நீண்டகாலம் பணியாற்றியவர்.
வயது 67
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா 1955 - 2022 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:08/04/2026

யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.   

ஆண்டு நான்கு கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும்
தங்கமுகத்தை மறக்கவில்லை
ஆனால் உங்கள் பிரிவை
எம் இதயம் ஏற்க மறுக்கிறது
ஒளி விளக்காய் இருந்த
எங்கள் குடும்பம் இருள்
சூழ்ந்து கொண்டது ஏனோ?
எங்கள் அப்பா அன்போடு எமை
அணைத்து ஆசை முத்தம
தந்து ஆசைப்பட்டது எல்லாம்
வாங்கித் தந்து மூன்று வேளை
சாப்பாடும் வயிறாரப் பசி போக்கி
 எங்களை வாழ வைத்த அப்பாவுக்கு
அன்னமிட்ட கையாலே - நாங்கள்
வாய்க்கரிசி போட்டு வழி அனுப்பி
வைத்த காட்சி எம் மனக்கண் முன்னே
வந்து நிழற்படம் போல் ஓடுது - அப்பா
அதனால்தான் எங்கள் நெஞ்சம்
 உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது அப்பா.

அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!

இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்



தகவல்: மனைவி, பிள்ளைகள், திருமதி ஸ்ரீகாந்தா

Photos