யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:31-03-2024
மல்லாகத்தின் மைந்தனாய் உதித்து
மக்களின் மனத்தில் இடம் பிடித்தாய்
எமது குடும்ப விருட்சத்தின் ஆணிவேராய்
அன்பும் பண்பும் கூடப்பிறந்தவராய்
இல்லை என்று வந்தோர்க்கு இரக்கம் காட்டினாய்
பசியோடு வந்தவர்க்கு பாசமுடன் உணவளித்தாய்
நந்தவனம் போன்ற நம்மண்ணில் - நீங்கள்
இன்று எங்களோடு இருந்திருந்தால்
அகவை அறுபத்தொன்பதை- எங்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பாய்
அதை எங்களால் நினைத்து பார்க்கத்தான் முடிந்தது அப்பா.
என் பாசமுள்ள அப்பாவே என்னையும் பிள்ளைகளையும்
தவிக்க விட்டு விட்டு எங்கு சென்றாயோ? அப்பா
நீங்கள் எங்களை விட்டு விண்ணுலகம் சென்றாலும்
எங்களுடன் பக்கத்தில் இருந்து வாழ்ந்த- அந்த
நாட்களை என்னால் மறக்க முடியுமா?
என்னோடு கூடவே இருப்பேன் என்று
கதைகள் பல பகிடியாய் சொல்லி சிரித்து
என்னுடன் பகிர்ந்த நாட்களை நினைத்து
கண்ணீரை நெஞ்சில் சுமந்து
கனவிலும் வந்து காவலாய் எனக்கு
துணையாய் இருப்பாய் என்று
கண்கலங்கி நிற்கின்றேன் அப்பா
அப்பா என்று அழைக்க யாரும் இல்லை இவ்வுலகில்
அப்பா மீண்டும் வரமாட்டாரா?
அணைத்திட வருவீர் என்று அழுகையுடன்
காத்திருக்கும் பிள்ளைகள்
குடும்பச் சுமையும் தலைமேல் ஏறியது- உங்களுக்கு
திரை கடல் ஓடியும் திரவியம் தேட என்று
கப்பல் ஏறினாய், கடல் வாழ்க்கையை கையில் எடுத்தாய்
அல்லும் பகலம் அயராது உழைந்தீர்
உப்புத் தண்ணீரில் நீண்டகாலம் பணியாற்றினாய்- கடைசியில்
உப்புத் தண்ணீர் குடித்து உங்கள் உடம்பும் உக்கிப் போனது- அப்பா
என்னையும் பிள்ளைகளையும் பரிதவிக்க விட்டு விட்டு
பசுமையான வாழ்க்கையை பறித்து சென்றது- ஏனோ
அமைதியில் ஒய்வெடுக்க இறைவனடி சென்றீரோ- அப்பா
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்- நாங்கள்
கடந்து வந்த பாதையை மறக்க மாட்டோம்- அப்பா
இரண்டு ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும் எங்கள் மனதில்
சீக்கிரம் விட்டுப் பிரிவீர் என்று- நாங்கள்
கனவிலும் நினைக்கவில்லை- அப்பா
எங்களின் கண்ணீர் பூக்கள் அப்பாவின் பாதங்களில்
Heartfelt sympathies to Arunthavaselvi wife & two sons of my beloved brother Baba. May his soul rest in peace My daughter Sweety & her family too joins in conveying their deepest sympathies. He has...