
யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று போனாலும்
அழியாது நம் சோகம்
மீளாது எம் துயரம் மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம் என்றும்
உயிர் வாழும் எங்கள் இதயமதில்
இறுதி வரை நிலைத்து நிற்கும் ஐயா
உங்கள் நிழலில் இருக்க ஆசைப் பட்டோம்-ஆனால்
காலன் சீக்கிரம் உங்களை கூப்பிடுவான்
என்று தெரியாமல் போச்சுது அப்பா
பாசமான கணவராய் ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித்தந்த அப்பாவாக
நாங்கள் அழும் குரல் உங்களுக்கு கேட்கிறதா
உங்கள் முகம் பார்க்க தவிக்கின்றோம்
உங்கள் குரல் கேட்க துடிக்கின்றோம்
மீண்டும் திரும்பி எப்போது வருவீர்கள்-என்று
ஏங்கித் தவிக்கும் பாசமுள்ள மனைவி பிள்ளைகள்...
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி
மகிழ வைத்தீரே யார் கண்பட்டு
மறைந்து போனீரோ தாமரை மலர்
நீரில் ஆடுவதுப்போல நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
Heartfelt sympathies to Arunthavaselvi wife & two sons of my beloved brother Baba. May his soul rest in peace My daughter Sweety & her family too joins in conveying their deepest sympathies. He has...