Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1955
மறைவு 24 MAR 2022
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா (யூனியன் கப்பல் பபா)
பழைய மாணவர்- மல்லாகம் இந்துக் கல்லூரி தெல்லிபழை யூனியன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, உதைபந்தாட்ட வீரர்(Soccer Player), முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர், Greek Ship இல் Bosun ஆக நீண்டகாலம் பணியாற்றியவர்.
வயது 67
அமரர் நவரட்ணம் ஸ்ரீகாந்தா 1955 - 2022 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவிலடி தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், சிவகாந்தபதியை வசிப்பிடமாகவும், அச்சுவேலி வளலாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் ஸ்ரீகாந்தா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 12/04/2023.

கரம் பிடித்தவனோடு வாழ்வில் பக்கபலமாய் இருக்காது
பாதியிலே பரிதவிக்க விட்டு விண்ணுலகம் ஓடிச் சென்றது ஏனோ
 எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய
 அப்பா இல்லை என கதறி அழும் பிள்ளைகளை
அநாதரவாய் தவிக்க விட்டு விரைந்தோடி சென்றாயோ
அன்புள்ளம் கொண்ட ஆருயிர் அப்பாவே நீங்கள் இல்லாமல்
 நாங்கள் அறுபட்ட பட்டம் போல்
பரிதவித்து நிற்கிறோம் அப்பா

பசி என்றோம் வயிராற முப்பத்திரண்டு வருசம்
கஸ்ரம் தெரியாமல் சாப்பாடு போட்டாய் அப்பா
வாழ் வென்றோம் வளம் பெறச் செய்தாய்
 இல்லறம் என்றோம் நல்லறம் தந்தாய்
 மக்கட் செல்வமே என்றோம் பெரும் செல்வம் தந்தாய்
பிணி என்றால் மருந்தாகி நின்றாய்
 மனக்குறை என்றோம் திருநகை காட்டி நின்றாய்
 நீர் எமக்கு தாயாக தந்தையாக சகோதரனாய்
 உற்ற துணையாய் உயிர் காக்கும் தோழனாய்
 பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாய்
எல்லாமே நீங்கள் தான் அப்பா எங்களுக்கு
 உயிர் உள்ள வரை மறப்போமா நாங்கள் 

உங்கள் அழகிய திருமுகம் பார்த்து
ஓராண்டு நினைவுநாள் வந்ததோ
 எண்ணில் அடங்காத நற்குணங்கள்
அத்தனைக்கும் ஏக தலைவனாக
இன்புற்று வாழ்ந்த உன்னைக்
 கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து
சென்ற காலனின் கருணையற்ற செயலால்
கலங்குதே எனது உள்ளம்

காலங்கள் எல்லாம் வாழ்வதாய் என காத்திருக்க
காலன் உன்னை அழைத்ததென்ன?
 கண்ணீரில் எனை விட்டு....
நெஞ்சில் நீங்கா துயர் இட்டு
 நீ போன தென்ன என்னை விட்டு.....

ஒரு வருடமாக அகலாத
நினைவோடு நான் உங்கள் உருவம்
 எங்கே என்று தேடுகின்றேம்
 எண்திசையும் வீசுகின்ற காற்று என்னில் படும்போது
நீங்கள் வந்து அழைப்பது போல் ஓர் உணர்வு

ஆனால் உங்கள் முகத்தை
மட்டும் காண முடியவில்லைஆயிரம் உறவுகள் இருந்தாலும் நீங்கள் இல்லாத
 இவ்வுலகில் இருள் அடைந்து போன உலகத்தில்
 இருப்பது போல் உணர்கிறேன்!!

என்றும் என் அருகில் நின்று காத்து நிற்பீர்கள்
 என எண்ணி காத்திருக்கிறேன்!

 உங்கள் அனபு மனைவி அருந்தா,
பாசமுள்ளை பிள்ளைகளின் கண்ணீர் பூக்கள்
உங்களுக்கு பூமாலையாக...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்......

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருந்தா - மனைவி
மாதுளன்(Max) - மகன்
மாதுஜன்(Matt) - மகன்

Photos