5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
(சண்)
வயது 68
அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரன் சண்முகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
ஐந்து ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
உம் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை இவ்வுலகில்
யாரும் தரப்போவது இல்லை அப்பா
உம்மைத் தவிர!!!
உம்மை நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றோம்
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்