யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரன் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும்
தங்கமுகம் மறந்தோமில்லை.
இன்று உங்கள் பிரிவால்
எம் இதயங்கள் கலங்குகின்றது
என் அன்புக்கும் ஆசைக்கும்
உரியவரே கடைசிவரை காக்காது
சடுதியில் சென்றதேன்
கலங்கி நிற்கின்றேன்
பதறி அழுகின்றேன்
எல்லாமே இழந்தது போல்
என் மனம் தவிக்கிறதே
நித்தம் கண்ணீர்வழிகின்றது
கண்மூடித்திறக்கும் நேரத்தில்
எங்களைத்தவிக்க விட்டு நிரந்தரமாக
பிரிந்தீர்கள் அப்பா
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா
எங்கு பார்த்தாலும்
உங்கள் முகம்தான் தெரிகின்றது்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளை
உங்களை இழந்து தவிக்கின்றது
தினந்தோறும் அளவில்லா
அன்பையும் பாசத்தையும் கொடுத்து விட்டு
எங்கு தான்சென்றீரோ
நீங்கள் இல்லாத இந்த உலகம
எங்களுக்கு இனி வெறும்
பாழடைந்த மண்டபம் தான்
உங்களை இழந்து உயிர் வாழும் நாங்களும்
இனி உணர்வற்ற வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி
மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்