Clicky

பிறப்பு 09 JUN 1939
இறப்பு 10 JUN 2024
திரு நாகலிங்கம் தருமலிங்கம்
வயது 85
திரு நாகலிங்கம் தருமலிங்கம் 1939 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ச பேரின்பநாதன் 13 JUN 2024 Sri Lanka

அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம் (தர்மண்ணர்) முன்னாள் பொதுநோக்கு கூட்டுறவுச் சங்க கடற்போக்குவரத்து நடத்துநரும் இலங்கை போக்குவரத்து சபை (C.T.B) நடத்துநரும், முன்னாள் இணக்க மன்று உறுப்பினரும் எத்தனையோ வலி கடந்து எமனை வென்று வந்து ஊர்தனில் உயர்ந்து நின்று உத்தமனாய் உயிர்த் திருந்து தர்ம லிங்கமாய் மணி மகுடமானவனே ஏன் உனக்கு அவசரமோ இடை நடுவே நீயகல பெருக்கடிப் பிள்ளையார் ஆலமரத்தடியும் அன்னதான மண்டப வாசல் தர்ம ஒலியும் தர்மண்ணர்-உன் மறைவால் மயங்கிக்கிடக்கிறது நெடுந்தீவு உயர்வொளியே மணி சூடா பெருவிளக்கே ஒளியணைந்து போனது போல் - உன் உயிர் உறைந்து போனது ஏன் அன்பின் திருவுருவாய் அயராது உழைப்பவனாய் ஊரின் உயர்வுக்காய் உனையுருக்கி நின்றவனே சவேரியாரின் மணி ஒலிக்காய் பெருங்கோபுரம் நீ அமைத்தாய் வீதியுலா தான் வர திருக்கூடு நீ தந்தாய் யார் கண் பட்டதுவோ உன் உயிர் படுவதற்கு பெருக்கடியில் உனையின்றி தேடித்திரிகின்றோம் மான்புமிகு மனிதம் நீ மனம் கவரும் தர்மண்ணன் நீ அன்பு நிறை அரவணைப்பும் பண்பான பாசமதுவும் எங்கள் இடம் அகன்று-உனை இழந்து தவிக்கிற்றோம் ஊரடியில் உன் மூச்சை-இனி யாரிடையில் நாம் காண்போம் கடல் நீர் அதுவும் ஆலம் விழுதும் கல்வயல் அதுவும் கரு மண் புழுதியதுவும் காட்டும் குறியாகி காலனிடம் ஏன் சென்றாய் ஊரில் பாசமிதோ - உன் உயிர் அறுந்து நாம் தவிக்க காலம்தான் சுழற்று-நீ காணாமல் போக நெஞ்சம் கனக்கிறது நினைவு துடிக்கிறது உந்தன் பிரிவுதனினில் ஊரே கண்ணீர் வடிக்கிறது. சென்றுவா நல் திருவிளக்கே என்றுமே- உன் வரவுக்காய் ஊர் முற்றம் உனை நோக்கும் ஓம் சாந்தி ஓம் சாந்தி நம் சாந்தி பிரிவால் துயரும் ச.பேரின்பநாதன் குடும்பம் பெருக்கடிக்கிராமம் நெடுந்தீவு இலங்கை

Tributes