யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் Villemomble ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஐந்து அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
தாயாய் எனைத் தாங்கியவளே
தமையனாய் எனைப் பார்த்தவளே
வீட்டு வாசலில் நின்று எனை வரவேற்று என்
வயிறாற உணவுதனை ஊட்டியவளே
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ அன்னையே!!!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்....
மாமி, நீ இல்லையெனினும், உன் வலிமையும் அன்பும் எங்கள் இதயத்தில் உயிராய் வாழ்கிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் நீ தளராத உன் மனதை இன்று நான் போற்றுகிறேன். நானும் தினமும் உன்னை நினைத்து, உன் தைரியம்...