யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரிமளம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 06-12-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக் கிரியைகள் 08-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப11:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல. 30, சென். அன்ரனிஸ் மாவத்தை, கொச்சிக்கடையில் அமைந்துள்ள தம்பையா சத்திரத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
A.L.3/4,
குணசிங்கபுரம்,
கொழும்பு-12.