Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 OCT 1940
மறைவு 08 NOV 2023
அமரர் நடராசா பரிமளம் 1940 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரிமளம் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீலயினார் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராணி, காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், மகேந்திரன், ரவிந்திரன் மற்றும் விமலராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் ஞானாம்பிகை(ஜேர்மனி), கலாநிதி(பிரான்ஸ்), தயானந்தன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருள்ஐயா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை, பராசக்தி, சண்முகவள்ளி, புஷ்பவதி மற்றும் சற்குணம், கனகவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீதரன், ஊர்மிளா, உசா, றஜி, வாகீசன், தர்சிகன், றஜிதா, செல்லா, சன்சகாந்த், அஜந்தன், கோபிகீதா, கிந்துசா, சித்திரா, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுஷன், டிலக்‌ஷி, தமிதா, நைனிகா, கனிஷ்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-11-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 01: 00 மணியளவில் ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்) 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விமலா - மகள்