யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு ஆனதம்மா
உமைப்பிரிந்து ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பாசமும் பரிவும் தந்து பார்த்துப் பார்த்து
வளர்த்தது பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான் இன்றும்
எம் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும் விட்டு விடவில்லை
நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
நம்பவே முடியவில்லையே நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
இன்று எம் அன்னை எமை விட்டு
விண்ணுலகம் சென்றாலும் உம்மை என்றும்
எண்ணியே எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
வாழ்வியலை எளிமையாக வாழ நமக்கு கற்றுக்கொடுத்த பெருந்தகை நீங்கள். எப்போதும் எங்கள் மீது கட்டுக்கடங்காத அன்பையும் பாசத்தையும் பொழியும் தாயே உங்களை மிஸ் பண்ணுறோம்..!