4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா யோகம்மா
வயது 87

அமரர் நடராஜா யோகம்மா
1930 -
2018
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10/07/2022
ஆண்டு நான்கு ஆனதம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்.
காலம் கடந்து காலனவன்
எமை
அழைக்கும்வரை
கண்ணீரோடு
காத்திருப்போம்
உனைக்
காணும் வரை
உன் நினைவு
சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில்
எமக்கு வழிகாட்டி
வல்லமை
தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்.
உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
வாழ்வியலை எளிமையாக வாழ நமக்கு கற்றுக்கொடுத்த பெருந்தகை நீங்கள். எப்போதும் எங்கள் மீது கட்டுக்கடங்காத அன்பையும் பாசத்தையும் பொழியும் தாயே உங்களை மிஸ் பண்ணுறோம்..!