Clicky

மண்ணில் 04 OCT 1933
விண்ணில் 02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி (J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87
அமரர் முத்து சுந்தரமூர்த்தி 1933 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vijaya Baskaran 05 NOV 2020 Canada

அண்ணன் சுந்தரமூர்த்தி ——————————- பிறந்த இடம் சண்டிலிப்பாய் வாழ்ந்த இடம் மானிப்பாய் எனக்கு அண்ணன் முறையான தொழில் அதிபர் வர்த்தகர் முத்து சுந்தரமூர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறு கனடா மொன்றியேலில் காலமானார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இவரும் ஒரு வரலாறாக பதியப்பட வேண்டியவர்.கல்வி மூலமாக பலர் தம்மை வளர்த்துக் கொண்டாலும் தமக்கான வர்த்தகம் தொழிற்துறைகளில் காலடி பதிக்க முடியவில்லை.இந்த சமூகங்களில் பரம்பரை தொழில்களை கடந்து வெளியே வரமுடியாத நிலையே இருந்தது. அந்த தடைகளை தகர்த்து தொழிற்துறை வர்த்தகம் என்பவற்றில் இறங்கி ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக வர்த்தகராக தன்னை வளர்த்துக்கொண்டவர். Final turning works,m s m industry,m s r காட் வெயரஸ் Wesley cinema,ஈஸ்வரி நகை மாடம் என பல வர்த்தக முயற்சிகளில் இறங்கி தன்னையும் ஒரு பெரிய வர்த்தகராக தொழில் அதிபராக நிலை நிறுத்தியவர். அரசியல் நிலைப்பாடு கட்சி என இல்லாதபோதும் கிராமசபை உறுப்பினராக உப தலைவர் தலைவர் சமாதான நீதவான் என பல்வேறு பரிமாணங்களில் ஆளுமை செலுத்தியவர். எந்த பாரம்பரிய பின்னணியும் இல்லாமல் சுய முயற்சியால் அடக்குமுறை ஒடுக்குமுறைகளை கடந்து எங்களாலும் முடியும் என நிரூபித்துக் காட்டிய தனிமனித சாதனையாளர்.கல்வித்துறை சாராமல் தொழிற் துறையால் முன்னேறிய மட்டுமல்ல பல தொழில் முகவர்கள் உருவாகவும் வழி வகுத்தவர்.நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மாறாமல் இருந்திருந்தால் மிகப் பெரும் தொழில் அதிபராக வளர்ந்திருப்பார். ஆயுதக் குழுக்களின் வரவால் அவரது தொழில் முயற்சிகளை மேற்கொண்டு நடத்த முடியாத காரணங்களாலும் வயது முதுமை காரணமாக பிள்ளைகளின் அன்பு கட்டளைகளால் நாட்டை விட்டு புலம் பெயர்ந்தார்.லண்டன் நகரில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது இறுதி நாட்களை பிள்ளைகளுடன் கனடா மொன்றியேல் நகரில் கழித்தார். உண்மையில் இத்தனை தடைகளையும் தகர்த்து முன்னேறிய இவரது வாழ்க்கைப் பாதையும் புரட்சிகரமானதே.எத்தனை வசதிகள் இருந்தபோதும் வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் காணப்படும் இவர் மிக எளிமையான மனிதராக எல்லோருடன் பழகும் நல்லிதயம் கொண்ட மனிதர். இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குமான இழப்பாகும்.இவரது வாழ்க்கையும் வரலாற்றில் பதியப்பட வேண்டியதே.

Tributes