Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 04 OCT 1933
விண்ணில் 02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி (J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87
அமரர் முத்து சுந்தரமூர்த்தி 1933 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 60 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் முத்து சுந்தரமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பை விதைத்த அப்பாவே
 அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
 வானடைந்து ஈராண்டு
ஆனாலும் ஆறாது உங்கள்
 பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
 கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
 அப்பா இனி காண்பது எப்போது?
 ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா என்றழைக்க நீங்கள்
 எனதருகில் இல்லையே!!!
 இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!

உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகின்றேன் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயந்தினி தவராஜா - மகள்
தர்மகுலேந்திரன் - மகன்
ஜெயந்திரன் - மகன்
முரளிதரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்