1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 OCT 1933
இறப்பு 02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி (J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87
அமரர் முத்து சுந்தரமூர்த்தி 1933 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 60 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து சுந்தரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-10-2021

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

COVID- 19 நாட்டின் சூழ்நிலை காரணமாக அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகளுக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அழைக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்