Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 AUG 1970
விண்ணில் 08 JAN 2020
அமரர் முரளிதரன் கதிரவேலு
வயது 49
அமரர் முரளிதரன் கதிரவேலு 1970 - 2020 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முரளிதரன் கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியிலே எம்மை உயர்த்தி
தாங்கிய ஆலமரம் - உம் விழுதுகள் தவித்திருக்க
வேரே நீ சாய்ந்ததென்ன

உன் புன்னகையை மொழியாக்கி 
புவிதனிலே வாழ்ந்த எனது அருமை மகனே
ஈசனவன் அழைத்திடவே
உலகைவிட்டு சென்றீரோ? என் அன்பு மகனே..?

உன் துணைவி அவள் தவித்திருக்க
நீங்கள் தூரமாய் சென்றதென்ன
உன் மனையாள் முகம் காண
வருவீரோ - ஓர் கணமே!

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

திசைதோறும் தேடுகிறோம்
விடைதானில்லை எங்கள் உயிராக
உணர்வாக உறவாய் நின்றாய்

தேடுகின்றோம் தேடுகின்றோம்
தேடிக்களைத்து விட்டோம்

பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம் உன் இழப்பை
எதிர் கொண்டு ஓராண்டு தான் ஆகினதோ?

எமது ஆருயிரே
உன் இழப்பால் வாடுகின்றோம்
வந்திடுவாய் எம் மனக் கண்முன்னால்
ஆண்டவரிடம் மன்றாடி உங்கள்
ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 09 Jan, 2020
நன்றி நவிலல் Fri, 07 Feb, 2020