டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீயே எமையாள் மதுரா!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே மதுராவே
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில்
விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
பத்தொன்பது வயதினிலே
எங்கள் வாழ்வை இருளாக்கி
அருமை மகளே மதுராவே
அரனடி சென்றது தகுமாமோ?
வன்னக் குயிலே வளர்மதியே
வாழ்வுக் கனவுகள் கலையமுன்னர்
கன்னி மகளே சென்றனையோ
காலச் சதியோ வினைவிதியோ?
ஆண்டு எட்டு இன்றுடன் ஆயிடினும்
அகலா(து) உன்னினைவு ஆள்கிறது
தூண்டா விளக்கைச் சூழ்ந்துன்னை
தூயவளே நாம் துதிக்கின்றோம்!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!