டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
தூரமாகிச் சென்ற அருமை மகளின்
ஆறாம் ஆண்டு நினைவுடன்
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அன்பினாலே எமையெல்லாம்
அரவணைத்த செல்வமே! - தூய
பண்பினாலே எல்லோரிடமும்
பழகிவந்த உள்ளமே!
கள்ளம் கபடம் இல்லாத
வெள்ளை மனசு நீயம்மா!
கருணைக்கு இலக்கணமாய்
கல்வியில் சிறந்த சேயம்மா
கிளிபோன்ற எழில்கொண்ட
குலம்சிறக்க பூத்தவளே!
வலிகளைத் தந்துவிட்டு தனியே
வாடிப்போனது சரிதானோ?
நீரைப்போல தாகம்தணித்து
நீங்காமல் தொடர்ந்த உறவே!
யாரை இனி உமைப்போல் காண்போம்?
வேரை இழந்த மரமாய் வீழ்ந்தோமே!
காற்றாய் வந்து கவர்ந்த
கூற்றுவன்
கொடுமை வாட்டுதம்மா
ஆற்றாது தினம் தவித்து எங்கள்
அடிநெஞ்சு கலங்குதம்மா
வம்சம் சிறக்கவென்று வந்த
வடிவழகுச் சிலையே!
வரும்வழி திசையெல்லாம்
உன்
வதனம் தெரியுது கண்ணே!
பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்
வழிதெரியாமல் தவிக்கின்றோம்
பூக்காதோ மீண்டும் உன்வாழ்வென்று
பேதை மனம் கலங்குதம்மா
ஆறாண்டு கடந்தாலும்
ஆறாது கண்ணே உன் நினைவு
ஆண்டவன் அணைப்பினிலே
அமைதியாய் உறங்கு செல்வமே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!