யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 17.11.2022
அன்பு மகளே சூதனா எங்கள் வீட்டுக்கு
முதல்முதல் ஒளிவிளக்காக வந்துதித்து,
எம்மை தாய் தந்தையாராக்கிய எம் குலவிளக்கே சூச்சி!!
உனையிழந்து ஏழு வருடங்கள்
உருண்டோடி விட்டதம்மா.
இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நீயே
எமக்கு
மீண்டும் மகளாகப் பிறக்க வேண்டும் மகளே.
நீளும் இரவில்உன்னை நினைக்கும் போதெல்லாம்
விழியின் ஓரம் கண்ணீர்த் துளிகள்
தான்.
இருப்பது ஓர்இதயம் அதிலும்உன் நினைவுதான்.
இருப்பது இரு விழிகள் அதிலும் உன் உருவம் தான்.
கருவில் இருந்தது சிலகாலம் தான்,
எதிரில் இருந்ததும் சிலகாலம் தான்,
ஆனால்
நீயோ கனவில் இருப்பதே
நிஜமாகி விட்டதே அம்மா சூச்சி!!
அன்பின் மறுஉருவமே அக்கா,
அன்பான உறவு அம்மா மட்டுமில்லை,
அக்காவும் தான்.
எமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்
நீயே அக்கா.
எங்கள் அன்பு அக்காவின் பாசத்திற்கு முன்னால்
அப்பா அம்மாவின் பாசம் கூடத் தோற்றுப் போகும்.
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன்னோடு மீண்டும் ஒரு
தாய் வயிற்றில் பிறக்க வரம் கொடு இறைவா என வேண்டுகிறோம்.
உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, கணவன், சகோதரர்கள்,
பிள்ளைகள், உறவினர்கள்.
My heart plunged into deep sorrow. I pray for your lovely child to Rest in Heavenly Abode!