6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 NOV 1990
இறப்பு 04 DEC 2015
அமரர் மதிசூதனா தர்சிகன்
வயது 25
அமரர் மதிசூதனா தர்சிகன் 1990 - 2015 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 28-11-2021

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

கார்த்திகை மாதத்தின் கார்முகிலுக்குள்,
முழுமதியாக வந்துதித்த மதிசூதனாவே!! சூச்சி!!
அதே கார்த்திகை மாதத்தில் கார் விபத்தில்
எம்மை விட்டுப் பிரிந்தாயோ???????????

அன்பு மகளாய்,இசைந்து போகும் சகோதரியாய்,
அழகு மிகு வாழ்க்கைத் துணையாய்,
அணைத்து மகிழும் அன்னையாய்,
எம்மோடு பயணித்த திருமகளே சூச்சி,
உனை நாம் இழந்து இன்றோடு
ஆறாவது ஆண்டை கண்ணீருடன் கடக்கிறோம்.

அழுகையும் கண்ணீரும் எமை விட்டு நீங்கவில்லை.
உன்னிடமிருந்து பெற்ற அன்பின் சுகம் இன்னும் அகலவில்லை.
எப்போதும் புன்னகைக்கும் உன் அழகு முகம்,
பௌர்ணமி நிலவைப் போல் உன் உருவம்,
முழுமதிபோல் மதி,சூச்சி எப்போதும்
 எம்மைச் சுற்றி காட்சி தருவாய்.
ஆனால் அமாவாசை வந்து நிலாவை
மறைப்பது போல் நீ மறைந்து சென்றதே மிக கொடுமை.

மாளிகை போன்ற மனையில் மகிழ்ச்சியுடன்
குடிபுகுந்து மாதங்கள் சில கடக்க மகளே!!
 உனை நாம் இழந்தோமே. உன் கழுத்தில்
பளிச்சிட்ட உன் தாலியும் தவித்தபடி தனியாக சிணுங்குதம்மா.
எவ்வளவு அற்புதமான வாழ்விலிருந்து
உன்னைப் பறித்த காலன் இரக்கமில்லாத அரக்கன்.
எங்கிருந்தாலும் நீ எம்மை என்றும்
மறவாத அன்போடு இரு அம்மா.

இப்பூவுலகில் எம் வாழ்வு உன்னையிழந்த
சோகத்தில் வெறுமை தான் மகளே!!!
பாசம் மிக கொண்டவளே
எம்மடியில் நீ மீண்டும் வந்தமர வேண்டுகிறோம்.
 உன் நீங்கா நினைவில் அப்பா, அம்மா, கணவன்,
 சகோதரர்கள், அன்பு மகன்,மகள், உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்