Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 09 NOV 1990
உதிர்வு 04 DEC 2015
அமரர் மதிசூதனா தர்சிகன்
வயது 25
அமரர் மதிசூதனா தர்சிகன் 1990 - 2015 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு மகளே சூதனா!!!
முழுமதியைக் காணாது இருளில் மூழ்கி, ஒரு நிசப்தமும், மயானஅமைதியும்,
கும்மிருட்டுமாக இந்த பிரபஞ்சமே ஒன்றும்
செய்வதறியாமல் இருக்கும்,
அதே போல் மதி உனது மதிமுகம் காணாது நாங்கள்
அனைவருமே
என்ன செய்வது என்று தெரியாமல்
கலங்கி நிற்கிறோம் அம்மா,
கூற்றுவன் கைப்பட்ட எந்த
உயிரும் திரும்ப வாராது
எனினும், நீ திரும்ப வரமாட்டாயா
என்று வழிமேல் விழிவைத்து
ஒரு நப்பாசையில் காத்திருக்கிறோம் மகளே!!

எத்தனை வருடங்கள் ஆனாலும் உன் மதிமுகம்,
உன்புன்சிரிப்பு
உன் சிணுங்கல் பேச்சு எங்களை
விட்டு மறையாது.
மகளே, எனக்கு இன்னொரு பிறப்பிருந்தால் நீயே
மறுபடியும்
என் மகளாக பிறக்க வேண்டுகிறேன்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்