ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
ஆண்டு 7 கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்....
கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!
அன்னை தந்தைக்கு ஆசைக்கோர் மகனாய்
அவதரித்த எம் அன்பு செல்லமே....
ஐயகோ! இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்ட
உன்னை காலன் பறித்தானோ!
எம் குலம் விழுது விட உதித்திட்ட முதல்
முத்தடா நீ கண்ணே...
தந்த கடன் வாங்க என்று தரணியில்
வந்து விட்டு முதல் முதலாய் முன்றியடித்து
சென்று விட்டாய் எம் செல்ல மகனே...
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் என்றும் மீண்டும் வருவதில்லை
இருந்தும்... அமுது துடிக்கின்றோம்
உன் ஆத்மா சாந்திக்காய் ஆண்டவன்
காலடியில் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
It's been five years sinces you left this world. but the love we have for you remains as strong as ever. You may be gone, but your spirit lives on forever guiding and protecting us. Tomorrow we...