6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்வின் ஜெய்சன்
1998 -
2018
நியூ யோர்க், United States
United States
Tribute
37
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு ஆனாலும்
உம் நினைவுகள் புரலாது
எம் இதயத்தில் மகன் என்று
நாம் அழைத்திட யாருண்டு இவ்வுலகினில்
எம்மை விட்டு ஏன் பிரித்தான் இறைவன் உம்மை?
கண்ணை இமை போல் காத்த
எம் அன்பு மகனை காணவில்லை!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
கண்களில் வழிந்திடும்
கண்ணீரை துடைத்திட
யாருண்டு...!
ஆறிரு கரங்கள்
அரவணைக்க இருந்தாலும்
மகனே உம் அன்புக்கரம்
தேடி அலைகின்றோம்
விண்ணுலகம் சென்றாலும் உம்மை
என்றும் எண்ணியே எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
It's been five years sinces you left this world. but the love we have for you remains as strong as ever. You may be gone, but your spirit lives on forever guiding and protecting us. Tomorrow we...