Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 OCT 1998
இறப்பு 08 NOV 2018
அமரர் மார்வின் ஜெய்சன்
வயது 20
அமரர் மார்வின் ஜெய்சன் 1998 - 2018 நியூ யோர்க், United States United States
Tribute 37 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அன்றெல்லாம் எம்முடன் நீ இருந்தாய்
ஆண்டுகளோ ஆடிப்பாடி மெல்ல நகரும்
இன்றோ எம்முடன் நீ இல்லை
ஆண்டுகளோ பறந்தோடி விரைந்து மறைகிறது
நாளேடு நீ மறைந்து 5 ஆண்டாகிறது
ஐயகோ நம்பவே முடியுதில்லை!

உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!

தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!

வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் பிரிவால்!

உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos