தோற்றம் 25 JUL 1942
மறைவு 22 NOV 2021
திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் (ம. வ. கானமயில்நாதன்)
ஓய்வுபெற்ற பிரதம ஆசிரியர், உதயன், சஞ்சீவி காலைக்கதிர் பத்திரிகைகள்
வயது 79
திரு மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் 1942 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவராஜா சோமசுந்தரம் வட்டுகோட்டை,டென்மார்க் 23 NOV 2021 Denmark

யாழ் மண்ணில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் தலைமை பதிப்பாசிரியராக, மிகவும் அபாயமான யுத்தகாலத்தில் பணியாற்றியவர், உதயன் பதிப்பு அலுவலகத்திலேயே நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் சிலர் கொல்லப்பட,உயிர்ப்பயத்தைவிட ஊடகசேவையின் முக்கியத்துவம் கருதி பலநாட்கள் அலுவலகத்துக்கு உள்ளேயே தங்கியிருந்து அந்நிறுவனத்தின் சேவை தடையுறாதவாறு மக்கள் பணிக்கென தன்னை அற்பணித்த, வட்டுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த பெருமகனின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 2014ஆம் ஆண்டில் இவரை லண்டனில் சந்தித்து உரையாடக் கிடைத்த சில நிமிடங்கள் எம் மனத்திரையில் வருகிறது. ஆசிரியர் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.