யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்களின் நன்றி நவிலல்.
எமது ஞானவிளக்கு அமரர் திரு. ம.வ.கானமயில்நாதன் அணைந்த செய்தி அறிந்து எமது துயரில் பங்குகொண்டு, நேரில் வந்து தேற்றியவர்களிற்கும், இறுதி மரியாதையிலும் இறுதிச் சடங்கிலும் அஞ்சலி நிகழ்விலும் நேரில் கலந்துகொண்டு ஆற்றுப்படுத்தியவர்களிற்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியவர்களிற்கும் நினைவுக் குறிப்புகள் எழுதியவர்களிற்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களிற்கும் தொலைபேசி மூலமாகவும் முகப் புத்தகம் மற்றும் இதரவழிகளிலும் எம்மை ஆறுதல் படுத்தியவர்களிற்கும் சிறப்பு கௌரவம் செய்த உதயன் குழுமம் மற்றும் காலைக்கதிர் - பசுமை ஊடக இல்லம் ஐ பி சி தமிழ் ஊடக அமைப்பு மற்றும் பிரதான மற்றும் முதற்பக்க செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் ஏனைய ஊடகத்துறை சார் அனைத்து உள்ளங்களிற்கும் ஊடக நிறுவனங்களிற்கும், துணையாக நின்று உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
22.12.2021 அன்று நடைபெறவுள்ள அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்விலும்
தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில்
நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும்
கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
யாழ் மண்ணில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் தலைமை பதிப்பாசிரியராக, மிகவும் அபாயமான யுத்தகாலத்தில் பணியாற்றியவர், உதயன் பதிப்பு அலுவலகத்திலேயே நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் அலுவலக...