14ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா பதினான்கு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!
உங்கள் ஆத்மா ஆண்டவரிடம் அமைதி பெற
பிராத்திக்கின்றோம்...
தந்தையை இழந்தும்
தாயாய்,
ஆசானாய்,
நண்பனாய்,
ஆயிரம் நெறிகளை
பக்குவமாக சொல்லிகொடுத்தவள்,
பக்குவப்பட்டாள் இன்று முதல்
கடவுளாக!
தொடர்புகளுக்கு,
பிள்ளைகள் +33782724423 / +94771712202
தகவல்:
பிள்ளைகள்
அக்கா யுத்த நேரத்திலும் குண்டு மழை பொழிந்த நேரங்களிலும் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியுலும் வருவோர்க்கு உணவளித்து ஆதரித்து அன்பு செலுத்திய சீமாட்டியே உங்களது அன்பை என்றும் மறக்க மாட்டேன்...