யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்...
இன்று நீங்கள் இன்றி
எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா...
ஆண்டுகள் பதினொன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும்
எம்முடன் கூடிக் குலாவி
மகிழ்ந்திருந்து தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
22-03-2023 புதன்கிழமை அன்று கட்டைக்காடு முள்ளியானில் உள்ள அவரது இல்லத்திலும் Stade de France இல் உள்ள மகனின் இல்லத்திலும் நடைபெறும் மதிய இரவு போசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம்.
அக்கா யுத்த நேரத்திலும் குண்டு மழை பொழிந்த நேரங்களிலும் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியுலும் வருவோர்க்கு உணவளித்து ஆதரித்து அன்பு செலுத்திய சீமாட்டியே உங்களது அன்பை என்றும் மறக்க மாட்டேன்...