யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும் அம்மா
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
அன்பிற்கும் இலக்கணமாய் வாழ்ந்து
பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்துவிட்டான்
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த என் அம்மாவை
ஆண்டவன் ஏன் அழைத்தானோ....!
22-03-2021 திங்கட்கிழமை அன்று கட்டைக்காடு முள்ளியானில் உள்ள அவரது இல்லத்திலும் Stade de France இல் உள்ள மகனின் இல்லத்திலும் நடைபெறும் மதிய இரவு போசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம்.
அக்கா யுத்த நேரத்திலும் குண்டு மழை பொழிந்த நேரங்களிலும் பொருளாதார தடை இருந்த காலப்பகுதியுலும் வருவோர்க்கு உணவளித்து ஆதரித்து அன்பு செலுத்திய சீமாட்டியே உங்களது அன்பை என்றும் மறக்க மாட்டேன்...