திதி:22/08/2025யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ். அச்சுவேலி தோப்பு, இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி சந்திரசேகரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-09-2026
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.