
திதி:22/08/2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ். அச்சுவேலி தோப்பு, இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி சந்திரசேகரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்களைக் காண்பது எப்போது
என்று தெரியவில்லை
ஓராண்டு சென்றாலும்
உங்கள் நினைவுகளால்
ஆறாத்துயரில் மூழ்கி இரங்குகிறோம்
உங்கள் வரவை எதிர்பார்த்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!